Saturday, November 7, 2020

மேலதிக நேரக் கொடுப்பனவு (Overtime Payment)

அரச சேவையில் பதவி நிலை உத்தியோகத்தர் மற்றும் வெளிக்க உத்தியோகத்தர் தவிர்ந்த ஏனைய உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்திற்கு மேலதிகமாக கடமைபுரிகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வழங்கப்படுவதே மேலதிக நேரக் கொடுப்பனவாகும்.

இக்கொடுப்பனவானது அவர்கள் பெறுகின்ற மாதாந்த அடிப்படை வேதனத்தினை 240 ஆல் வகுத்துப் பெறப்படுகின்ற தொகையினை அவர்கள் மேலதிகமாக கடமையாற்றிய மணித்தியாலத்தினால் பெருக்கும்போது கிடைக்கப் பெறுவதே அக்குறித்த மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவு பெறப்படும்.

குறித்த உத்தியோகத்தர்கள் எவ்வளவு மணித்தியாலங்களை மாதாந்தம் மேலதிகமாகக் கடமையாற்றமுடியும் என்பதனை குறித்த திணைக்களத் தலைவர் கடமையின் தன்மைக்கேற்ப நிர்ணயம் செய்து கொள்வார்.